கீவ்: மூன்றாம் உலகப் போர் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளதாக உக்ரைன் முன்னாள் தளபதி வாலெரி ஜலுச்னி கூறியுள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டுள்ளதுடன், வடகொரியா, ஈரான், சீனாவும் களத்தில் குதித்துள்ளன. இதுகுறித்து உக்ரைன் முன்னாள் தளபதி வாலெரி ஜலுச்னி அளித்த பேட்டியில், ‘2024ம் ஆண்டில், ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரின் பரிமாணங்கள் மாற்றமடைந்துவிட்டன. உக்ரைன் தற்போது ரஷ்யாவுக்கு எதிராக மட்டுமல்ல, வட கொரிய சிப்பாய்களுக்கும் எதிராக போராடி வருகிறது.
உக்ரைனின் வெற்றி உறுதியானதில்லை. மேம்பட்ட தொழில்நுட்ப மற்றும் மேலதிக ஆதரவைப் பெறும்போது மட்டுமே சாத்தியமாகும். இன்றைய நிலையில் மூன்றாம் உலகப் போர் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது என்றே கூறலாம்’ என்றார். முன்னதாக ரஷ்ய அதிபர் புடின், அமெரிக்க விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வெற்றிக்கரமாக பரிசோத்தித்தாக கூறியுள்ளார். இந்த ஏவுகணை ஒலியின் வேகத்தை விட 10 மடங்கு வேகத்தில் பாயும் என்றும் கூறியுள்ளார்.
The post 3ம் உலகப் போர் தொடங்கிவிட்டது: உக்ரைன் முன்னாள் தளபதி பேட்டி appeared first on Dinakaran.