நாங்குநேரி அருகே மண் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி: வீட்டிற்கு முன் நாற்காலியில் அமர்ந்த போது சோகம்

நெல்லை: நாங்குநேரி அருகே வீட்டிற்கு முன் நாற்காலியில் அமர்ந்த போது மண் சுவர் இடிந்த விழுந்து முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை கடந்த சில நாட்களாக தீவிரமாக இருந்தது. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடி, பாண்டிச்சேரி கிராமத்தில் வடக்கு தெருவைச் சேர்ந்த அப்பாவு (75) என்பவரது மண் வீடு நனைந்து உறுதித்தன்மை இழந்தது.

அப்பாவு தினசரி வீட்டிற்கு முன் நாற்காலி போட்டு சிறிது நேரம் அமர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதபோல் இன்றும் அப்பாவு அவரது வீட்டிற்கு முன் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது மழையில் உறுதித்தன்மை இழந்த மண் சுவர் சரிந்து அப்பாவு மீது விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி அப்பாவு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது வீட்டுச் சுவர் இடிந்து கிடப்பதையும், அப்பாவு உயிரிழந்ததையும் பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விஜயநாராயணம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். சுவர் இடிந்து விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் பரப்பாடி அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post நாங்குநேரி அருகே மண் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி: வீட்டிற்கு முன் நாற்காலியில் அமர்ந்த போது சோகம் appeared first on Dinakaran.

Related Stories: