இது குறித்து, மும்பையில் பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்; மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த கங்கனா. உத்தவ் தாக்கரேவின் மோசமான தோல்வியை நான் எதிர்பார்த்தேன். வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக ஓட்டளித்த மஹாராஷ்டிரா மக்களுக்கு பாராட்டுகள். பெண்களை மதிக்கிறார்களா அல்லது அவர்களின் நலனுக்காக பாடுபடுகிறார்களா என்பதைப் பொறுத்தே யார் கடவுள் மற்றும் அசுரன் என்பதை நாம் அடையாளம் காண முடியும். பெண்களை அவமரியாதை செய்யும் அசுரன் உத்தவ் தாக்கரே.
இதுதான் அவரது கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணம். அவர்கள் என் வீட்டை இடித்துவிட்டு தன்னை பற்றி தவறாக பேசினார்கள் என்று குற்றச்சாட்டினார். இதுபோன்ற செயல்கள் விளைவுகளை ஏற்படுத்தும் என தெரியும் என அவர் கூறினார். மும்பையில் பாந்த்ரா பகுதியில் கங்கனா ரனாவத்துக்கு சொந்தமான பங்களா விதி மீறி கட்டப்பட்டதாக கூறி அதன் ஒரு பகுதியை கடந்த 2020 ஆண்டு உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்த போது இடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post பிரிவினைவாதிகளுக்கு மகாராஷ்டிர தேர்தலில் பாடம் புகட்டிய மக்கள்: உத்தவ் கட்சி தோல்வியை விமர்சித்த கங்கனா ரனாவத்! appeared first on Dinakaran.