ஆலத்தூர் தாலுகாவில் 500 ஏக்கரில் சம்பா சாகுபடி பணி தீவிரம்

பாடாலூர் : ஆலத்தூர் தாலுகாவில் 500 ஏக்கரில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது. வடகிழக்கு மழை கைகொடுத்ததால் விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர்.பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா வானம் பார்த்த பூமியாகும். மழை பொழிந்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணற்றில் ஊற்றெடுத்து தண்ணீர் வந்தால் தான் விவசாயம் செய்ய முடியும்.

இதனால் விவசாயிகள் புன்செய் பயிர்களான சின்ன வெங்காயம், நிலக்கடலையை அதிகம் சாகுபடி செய்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக ஆலத்தூர் பகுதியில்உள்ள பல்வேறு கிராமங்களிலும் அதிகளவில் மழைபொழி ந்து வருகிறது. இதனால் நில த்தடி நீர் மட்டம் உயர்ந்து கிணற்று நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. இதனை பயன்படுத்தி நடப்பாண்டு விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

வழக்கம்போல் இந்தாண்டு பாடாலூர், இரூர், காரை, ஆலத்தூர்கேட், நாரணமங்கலம், மருதடி, ஈச்சங்காடு, புதுவிராலிப்பட்டி, பழைய விராலிப்பட்டி, புதுஅம்மாபாளையம், சிறுவயலூர், டி.களத்தூர், கண்ணப்பாடி, தேனூர், தொட்டியபட்டி, நக்கசேலம், அடைக்கம்பட்டி கிராமங்களில் சுமார் 500 ஏக்கரில் சம்பா சாகுபடியில் இறங்கி உள்ளனர். தற்போது நடவு பணி மும்முரமாக நடந்து வருகிறது.

இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், மழை காரணமாக இப்போது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பதாலும், இன்னும் மழை நீடிக்கும் என்பதாலும் நம்பிக்கையோடு சம்பா சாகுபடியை மேற்கொண்டுள்ளோம்.நெல் நடவுக்கு ஒரு ஏக்கருக்கு டிராக்டர் கூலி ரூ.6500, நடவு கூலி ரூ.5500, நாற்று விடுதல் செலவு ரூ.3000, களை எடுத்தல், உரம் தெளித்தல், மருந்து தெளித்தல் என மொத்தம் ரூ.10,000 செலவாகிறது. சம்பா பட்டத்தில் 110 நாள் முதல் 120 அறுவடை காலமாகும். நல்ல மகசூல் கிடைத்தால் நன்றாக இருக்கும். கூட்டுறவு சங்கங்களில் தேவையான உரத்தை இருப்பு வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post ஆலத்தூர் தாலுகாவில் 500 ஏக்கரில் சம்பா சாகுபடி பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: