- பாஜக
- கே.பி. முனுசாமி
- குடியாதம்
- முன்னாள் அமைச்சர்
- கேபி முனீசாமி
- அஇஅதிமுக
- குடியாட்டம்
- வேலூர் மாவட்டம்
- தேர்தல் ஆணையம்
குடியாத்தம்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் அதிமுக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘வாக்காளர் பட்டியலில் அதிமுகவினர் சுட்டிக்காட்டும் தவறுகள் குறித்து தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக குறித்து பாஜவினர் அவதூறாக பேச வேண்டாம் என எந்த அறிக்கையும் வரவில்லை. பாஜ கூட்டணியில் அதிமுக இல்லை என எடப்பாடி பழனிசாமி உறுதியாக சொல்லிவிட்டார். பாஜவுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை’ என்று தெரிவித்தார்.
The post பாஜவுடன் கூட்டணிக்கு வாய்ப்பா? கே.பி.முனுசாமி பதில் appeared first on Dinakaran.