×
Saravana Stores

ஒன்றிய அரசின் பொருளாதார கொள்கையால் சிறு, குறு தொழில்கள் காணாமல் போய்விட்டன: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: ஒன்றிய பாஜ அரசின் பொருளாதார கொள்கையால் சிறு, குறு தொழில்கள் இந்தியாவில் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டன என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் 99வது செயற்குழு கூட்டம் சென்னை சத்திய மூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் புவனேஸ்வரி நஞ்சப்பன் தலைமை தாங்கினார். மேலும் இலவச நலவாரிய பதிவு துவக்க விழாவை செல்வப்பெருந்தகை ெதாடங்கி வைத்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டி: தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 2வது வாரத்தில் கூட வாய்ப்புள்ளது. அப்படி கூடினால் தொழிலாளர் பிரச்னைகள் குறித்து சட்டப்பேரவையில் காங்கிரஸ் இயக்கம் குரல் எழுப்பும். அமைப்பு சாரா தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் இடையே பெரிய பாகுபாடு உள்ளது. கட்டிட தொழிலாளர்களுக்கு கட்டிடங்களுக்கு அனுமதி அளிக்கும் போது ஒரு சதவீதம் செஸ் வழங்க வேண்டும் என்பது சட்டம். இதிலும் சில இடங்களில் குறை உள்ளது. கட்டுமான தொழிலாளர்களுக்கு ஒரு சட்டம், உடல் உழைப்பு கொடுக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு சட்டம் என்று இருப்பதை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

ஜிஎஸ்டி மற்றும் தவறான பொருளாதார கொள்கையால் சிறு, குறு, தொழில்கள் இந்தியாவில் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டன. இதற்கு பாஜ ஆட்சியே காரணம். கூட்டணி இல்லாமல் எந்த கட்சியும் வெற்றி பெற முடியாது. இருந்தாலும் ஆட்சியில் பங்கை என்பதை எப்போதும் காங்கிரஸ் கேட்டதில்லை. கூட்டணி ஆட்சி அமைப்பது பற்றி அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். தமிழிசை மீது மரியாதை வைத்துள்ளோம். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசிக் கொண்டிருக்கிறார். நாடாளுமன்ற கூட்டத்தில் பெண் சிங்கமாக, இந்திரா காந்தியின் மறு உருவமாக பிரியங்கா காந்தி செயல்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஒன்றிய அரசின் பொருளாதார கொள்கையால் சிறு, குறு தொழில்கள் காணாமல் போய்விட்டன: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Union government ,Selvaperunthakai ,CHENNAI ,Union BJP government ,India ,Selvaperundagai ,working ,meeting ,Tamil Nadu Congress Trade Union ,Satya Murthy Bhawan ,Chennai.… ,Selvapperunthakai ,
× RELATED ஜி20ன் கோடீஸ்வரர்களுக்கு வரி விதிப்பு...