×
Saravana Stores

முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆண்டாய்வு: மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமனம்

சென்னை: தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆண்டு ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து மாவட்ட வாரியாக அதிகாரிகளையும் நியமித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம்- பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், காஞ்சிபுரம் மாவட்டம் – மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குர் உமா, சென்னை மாவட்டம்- தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிச்சாமி, திருவள்ளூர் மாவட்டம்- தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், தமிழகத்தில் 38 மாவட்டங்களுக்கும் ஆ்ய்வு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள இயக்குநர்கள், இணை இயக்குநர் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆய்வுப் பணிகளை டிசம்பர்- ஜனவரி மாதத்துக்குள் முடித்து அதற்கான அறிக்கையை 15 நாட்களுக்குள் பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

The post முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆண்டாய்வு: மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Chengalpattu District ,School Education Kannappan ,Kanchipuram District ,
× RELATED பள்ளி மாணவர்களிடம் ஒழுக்க கேடாக...