தொடர் புகார் காரணமாக நேற்று நாராயணத்தேவன்பட்டி ஊராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தெருக்ககளிலும் சாக்கடை கால்வாய், சாலைவசதி, கழிப்பிடம், குடிநீர் வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அடிப்படை வசதிகள் குறித்து ஊராட்சி தலைவர் செல்லையா பொன்னுத்தாய், வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) கனி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஜெயபிரகாசம், உதவிபொறியாளர் மற்றும் பணிமேற்பார்வையாளரிடம் கேட்டறிந்தார். பின்னர், மாவட்ட திட்ட அலுவலரை செல்போனில் தொடர்பு கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை வேண்டும் என தேனி எம்பி உத்தரவிட்டார். அடிப்படை வசதிகளுக்கு ஊராட்சியில் நிதி பற்றாகுறை இருப்பின், எம்பி நிதியில் இருந்து நிதி பெற்றுவருவதாக கூறினார். பின்னர் ஊராட்சி நூலகம் அருகே நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார். இதில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post நாராயணத்தேவன்பட்டி ஊராட்சி பகுதிகளில் தேனி எம்பி ஆய்வு appeared first on Dinakaran.