×
Saravana Stores

ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் பாரம்பரிய நடைமுறை உயர் நீதிமன்ற வாயில்கள் 1 நாள் மூடல்

சென்னை: ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் உயர் நீதிமன்றம் கட்டப்பட்டதால் இப்பகுதிகளில் வசித்த மக்கள் உயர் நீதிமன்றத்தை சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவானது. நாளடைவில் அது அதிக தூரமாக கருதி உயர் நீதிமன்ற வளாகத்தை வழிப்பாதையாக பயன்படுத்த தொடங்கினர். இதை கவனத்தில் கொண்ட நீதிமன்ற நிர்வாகம், மக்கள் வருங்காலங்களில் நீதிமன்ற வளாக வழிப்பாதைகளை உரிமை கோரி விடக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் வருடத்தில் ஒருநாள் மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் மூடப்படும் என்று அறிவித்து வருகிறது.

இந்த நடைமுறை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் இறுதி வாரத்தின் சனிக்கிழமையில் கடைபிடிப்பது வழக்கம். அதன்படி நவம்பர் 23ம் தேதி இரவு 8 மணி முதல் 24ம் தேதி இரவு 8 மணிவரை உயர் நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்படும். பொதுமக்கள், வழக்கறிஞர்கள் என ஒருவரும் உயர் நீதிமன்ற வளாகத்தில் நுழைய அனுமதியில்லை என்று உயர் நீதிமன்ற பதிவாளர் (நிர்வாகம்) பி.ஹரி அறிவிப்பாணை வௌியிட்டுள்ளார். அதன்படி நேற்று இரவு 8 மணி முதல் இன்று இரவு 8 மணிவரை சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டன.

The post ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் பாரம்பரிய நடைமுறை உயர் நீதிமன்ற வாயில்கள் 1 நாள் மூடல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Court ,George Town ,Parimuni ,Florist ,
× RELATED ஓ.பி.எஸ். மீதான வழக்கு; விரைந்து குற்ற...