×
Saravana Stores

2023ல் நடந்த குரூப் 2 தேர்வில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் எந்தவித முறைகேடும் இல்லை: டிஎன்பிஎஸ்சி அறிக்கை

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: 2023ல் நடந்த ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (முதன்மை) தேர்வு-2 (குரூப் 2 மற்றும் 2ஏ பணிகள்)வில் விரிந்துரைக்கும் வகை, விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக சிலர் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். விரிந்துரைக்கும் வகை தேர்வில் தேர்வர்களின் விடைத்தாள்களில் உள்ள ஒவ்வொரு வினாவின் விடையும் பல்வேறு மதிப்பீட்டாளர்களால், மதிப்பீடு செய்யப்படுவதால் ஏற்படும் வேறுபாடுகளை, குறைப்பதற்காக, ஒரு தேர்வரின் ஒவ்வொரு வினாவிற்கான விடையும் இரண்டுமுறை மதிப்பீடு செய்யப்படுகிறது.

அவ்வாறு இரண்டுமுறை மதிப்பீடு செய்யப்பெற்று பெறப்பட்ட மொத்த மதிப்பெண்களின் சராசரியே, தேர்வரின் மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. மேலும் இரண்டுமுறை மதிப்பீடு செய்யப்பெற்று பெறப்பட்ட மொத்த மதிப்பெண்களுக்கு இடையே 15% சதவீதத்திற்கு மேற்பட்ட வேறுபாடு இருப்பின், தேர்வாணையம் அந்த தேர்வரின் அனைத்து வினாக்களின் விடைகளையும் மூன்றாவது முறை மதிப்பீடு செய்கிறது. 2023ல் நடந்த ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (முதன்மை) தேர்வு- 2 (தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகள்)ல் விரிந்துரைக்கும் வகை, விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் எந்தவித முறைகேடும் இல்லை. தவறான தகவலை பரப்பாதீர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 2023ல் நடந்த குரூப் 2 தேர்வில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் எந்தவித முறைகேடும் இல்லை: டிஎன்பிஎஸ்சி அறிக்கை appeared first on Dinakaran.

Tags : DNBSC ,Chennai ,Tamil Nadu Government Personnel Selection Board ,TNPSC ,Dinakaran ,
× RELATED தேர்வர்கள் தேர்வுக்கு...