×
Saravana Stores

வாலிபரை துண்டு துண்டாக வெட்டி கொன்று பாலிதீன் பையில் வீச்சு: தலை, கை, கால்களை தேடும் போலீஸ்

வானூர்: விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா திருவக்கரை பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான கல்குவாரி குட்டையில் பாலிதீன் பையில் ஆண் சடலம் கிடப்பதாக வானூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், தீயணைப்பு படையினருடன் சென்று பாலிதீன் பையில் சுற்றியபடி கிடந்த சடலத்தை மீட்டனர். தலை, கை, கால்கள் வெட்டப்பட்டு துர்நாற்றம் வீசிய நிலையில் ஆண் சடலம் இருந்ததால் அதிர்ச்சியடைந்தனர். நெஞ்சு பகுதியில் கஸ்தூரி என்ற பெயர் மட்டும் பச்சை குத்தப்பட்டு இருந்தது. கொலை செய்யப்பட்டவருக்கு 30 வயது இருக்கலாம்.

ஒரு வாரத்திற்கு முன்பே யாரோ கொலை செய்து தலை, கை, கால்களை துண்டித்துவிட்டு சடலத்தை மட்டும் பாலிதீன் பையில் சுற்றி கட்டி கல்குவாரியில் போட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். சடலத்தின் தலை, கை, கால்கள் உள்ளிட்ட உடல் பாகங்களை அருகிலுள்ள பகுதிகளில் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்றும் விசாரணை நடக்கிறது. விழுப்புரம் எஸ்பி தீபக் சிவாச் சடலம் கிடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்தார். அப்பகுதியில் காணாமல் போனவர்களின் பட்டியலை சேகரித்தும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு இதே கல்குவாரியில் பெண் ஒருவரின் உடல், சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post வாலிபரை துண்டு துண்டாக வெட்டி கொன்று பாலிதீன் பையில் வீச்சு: தலை, கை, கால்களை தேடும் போலீஸ் appeared first on Dinakaran.

Tags : VANUR ,VANUR POLICE ,KALGUWARI ,TALUKA ,THIRUVAKKARI AREA ,VILUPURAM DISTRICT ,
× RELATED கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை கொன்று...