கும்மிடிப்பூண்டி: வெளிநாடுகளில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டு, எண்ணூர் துறைமுகம் வழியாக டேங்கர் லாரிகள் மூலம் கும்மிடிப்பூண்டி காவல்நிலையம் பின்புறம் உள்ள கேஸ் கம்பெனியில் கேஸ் சேமிக்கப்பட்டு, கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு கேஸ் நிரப்பப்பட்டு வருகிறது. இதன்பிறகு இங்கிருந்து சென்னை, செங்குன்றம், தண்டையார்பேட்டை, கோயம்பேடு, பூந்தமல்லி, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்க்களுக்கும் லாரிகள் மூலம் பாதுகாப்பாக அனுப்பப்படுகிறது.
இன்று காலை சென்னையை சேர்ந்த டிரைவர் பிரதாப், டேங்கர் லாரியில் கேஸ் நிரப்பிக்கொண்டு கும்மிடிப்பூண்டி சிப்காட் நுழைவாயில் பகுதியில் வந்துள்ளார். அப்போது சாலையில் உள்ள வேகத்தடை மீது லாரி ஏறியபோது திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டதால் உடனடியாக லாரியை நிறுத்திவிட்டு கம்பெனி ஊழியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஊழியர்கள் உடனடியாக கேஸ் கசிவை சரி செய்து மீண்டும் கேஸ் நிரப்பும் கம்பெனிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து அறிந்ததும் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வந்து விசாரித்தனர். இதன்காரணமாக அரை மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு நிலவியது.
The post கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் பரபரப்பு; டேங்கர் லாரியில் கேஸ் கசிவு appeared first on Dinakaran.