×
Saravana Stores

பைண்டிங் படிப்பு தொடர முடியுமா?: பதில்தர ஐகோர்ட் ஆணை

சென்னை: 2024-25 கல்வியாண்டில் புத்தக பைண்டிங் படிப்பை தொடர முடியுமா? என தமிழ்நாடு அரசு பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பார்வைத்திறன் குறையுடையோருக்கான தேசிய கூட்டமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் புத்தக பைண்டிங் படிப்புக்கு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறும் நடைமுறை இன்னும் துவங்கவில்லை. 1982-ல் துவங்கப்பட்ட தொழிற்பயிற்சி மையத்தில் புத்தக பைண்டிங் படிப்பு அரசு நிதியுதவியுடன் நடத்தப்பட்டு வந்தது. புத்தக பைண்டிங் படிப்பை தொடந்து நடத்த உத்தரவிட வேண்டும் என ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் பூவிருந்தவல்லி பார்வை குறையுடையோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையத்தில் புத்தக பைண்டிங் படிப்பை தொடர முடியுமா? என தமிழ்நாடு அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.

The post பைண்டிங் படிப்பு தொடர முடியுமா?: பதில்தர ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Tags : iCourt ,CHENNAI ,Madras High Court ,Tamil Nadu government ,National Federation for the Visually Impaired ,Dinakaran ,
× RELATED மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால்...