தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது..!

சென்னை: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. 2 நாட்களில் தாழ்வு பகுதி, மேற்கு, வடமேற்கில் நகர்ந்து தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதிகளில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தமிழ்நாடு, இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகரும் என வானிலை மையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக நாளை மறுநாள் முதல் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் முதல் தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. நவ.26-ம் தேதி கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாட்டங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது..! appeared first on Dinakaran.

Related Stories: