சென்னை: டெல்லியில் கழகத்துக்கும், உலக அரங்கில் இந்தியாவுக்கும் பெருமை தேடித் தந்த பண்பின் திருவுருவம் மதிப்புக்குரிய முரசொலி மாறன் அவர்களின் நினைவுநாள். தலைவர் கலைஞர் மீது கொண்ட தூய அன்பு, ஒப்பிலா அறிவுக்கூர்மை, மாறாக் கொள்கை என எடுத்துக்காட்டாக வாழ்ந்து நிறைந்த அவரது பணிகளை நன்றியுடன் இந்நாளில் போற்றுகிறேன்.
இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர், தமிழ் வளர்த்த ‘முரசொலி’ எனும் முதுபெரும் நாளேட்டின் ஆசிரியர், இளம் பிராயம் தொட்டு பொதுப்பணியிலே ஆர்வம் கொண்டு, அயராது பொதுத்தொண்டு ஆற்றியவர்.
தமது 35 ஆண்டு காலத்திற்கும் மேலான நாடாளுமன்ற அனுபவத்தால், நாடாளுமன்ற ஜனநாயக முறைகளை பழுதற உணர்ந்த, பேணிய பண்பாளர், பொருளாதாரப் பிரச்சினைகள் குறிப்பாக தொழில் மற்றும் வர்த்தகக் கொள்கை சீர்திருத்தங்களை அலசி ஆராயும் அளவிற்கு ஆழ்ந்த பேரறிவு வாய்க்கப் பெற்றவர், இலக்கியத் துறையில் இன்பத் தமிழ்க் காவியங்கள் ஏராளம் படைத்தளித்தவர் முரசொலி மாறன் அவர்கள்.
உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் எனும் கழகத்தின் தூய்மையான கொள்கையே மாநில சுயாட்சி கோரிக்கை. இந்தியாவைத் துண்டு துண்டாக்கிட தூக்கப்படும் கொடுவாள் இது என்றும் ஒருமைப்பாட்டு உணர்வுக்கு எதிராக வைக்கப்படும் வேட்டு என்றும் தாங்களும் குழம்பி, பிறரையும் குழப்ப முனைந்த இருசாராருக்கும் அளிக்கப்பட்ட விரிவான விடைபோல, மாநில சுயாட்சி எனும் மகத்தான நூலினை யாத்தளித்து, கழகத்தின் வரலாற்றில் தனக்கென தனியிடம் பதித்த தகைமையாளர்.
இந்நிலையில் முரசொலி மாறன் நினைவுநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழ்ந்துள்ளர். தலைவர் கலைஞர் மீது கொண்ட தூய அன்பு, ஒப்பிலா அறிவுக்கூர்மை, மாறாக் கொள்கை என எடுத்துக்காட்டாக வாழ்ந்து நிறைந்த அவரது பணிகளை நன்றியுடன் இந்நாளில் போற்றுகிறேன்.
The post முரசொலி மாறன் நினைவுநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் appeared first on Dinakaran.