மும்பை: மஹாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. மஹாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது, ஜார்க்கண்டில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கு நவம்பர் 14, 20- தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 20ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவாக இம்முறை 65 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.
மகாயுதி கூட்டணியில் பாஜ, ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உள்ளன. மறுபுறம் மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திரபவார் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆட்சியை கைப்பற்றுவது மகாவிகாஸ் அகாடிக்கு முக்கியமானதாகும்.
ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார். மொத்தமுள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளில் முதற்கட்டமாக கடந்த 13ம் தேதி 43 தொகுதிகளிலும், இரண்டாம் கட்டமாக கடந்த 20ம் தேதி 38 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெற்றன. முதற்கட்ட தேர்தலில் 64.85% வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 67.59% வாக்குகளும் பதிவாகி இருந்தன. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. காலை 11 மணி அளவில் இரு மாநிலங்களிலும் புதிதாக ஆட்சி அமைப்பது யார் என்பது தெரிந்துவிடும்.
The post மஹாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது appeared first on Dinakaran.