தஞ்சாவூர், நவ. 23: தஞ்சையில் இருந்து வேலூருக்கு 2,500 டன் அரிசி சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதில், விளையும் நெல் நேரடி கொள்முதல் நிலையம், மார்க்கெட் கமிட்டிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரவை செய்து, பொது வினியோகத் திட்டத்திற்கு அரிசியாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2,500 டன் அரிசி மூட்டைகள் ஏராளமான லாரிகளில் தஞ்சை ரயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர், சரக்கு ரயிலில் 42 வேகன்களில் 2,500 டன் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு வேலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
The post தஞ்சையில் இருந்து வேலூருக்கு 2,500 டன் அரிசி ரயிலில் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.