×
Saravana Stores

தென் மாவட்டங்களை சேர்ந்த ரயில்வே ஓய்வூதியர்களுக்கு இருப்பு சான்றிதழ் முகாம்

மதுரை, நவ. 23: தென் மாவட்டங்களை சேர்ந்த ரயில்வே ஓய்வூதியர்களுக்கு, இருப்பு சான்றிதழ் வழங்கும் முகாம் கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா தலைமையில் நடைபெற்றது. ரயில்வே ஓய்வூதியர்களுக்கு பெரும்பாலும் வங்கிகள் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் உயிருடன் உள்ளனர் என்பதற்கான சான்றிதழ்கள், வருடந்தோறும் நவம்பர் மாதம் வங்கிகளுக்கு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு வரை, ஓய்வூதியர்கள் நேரடியாக வங்கிகளுக்கு சென்று தங்களுடைய ஆதார் அட்டை ஆகியவற்றை காண்பித்து சான்றிதழ் பெற வேண்டியதாக இருந்தது.

இதற்கிடையே மத்திய அரசு மின்னணு முறையில் இருப்பு சான்றிதழ் வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியது. இதற்காக மொபைல் போனில் ஆதார் அட்டையில் உள்ள முகக்குறி, கைவிரல் ரேகை போன்றவற்றை தெரிவுபடுத்த தேவையான செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்தப் பணியை எளிதாக்கும் வகையில், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதனை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா துவக்கி வைத்தார்.

இந்த சிறப்பு முகாமின் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே ஓய்வூதியர்கள், தங்களது இருப்பு சான்றிதழை இணையம் மூலம் எளிதாக பதிவு செய்தனர். முதுநிலைக்கோட்ட நிதி மேலாளர் டி.இசைவாணன், கோட்ட ஊழியர் நல அதிகாரி டி.சங்கரன் தலைமையில் ரயில்வே ஓய்வூதியர்கள் சான்றிதழ் பெற ஊழியர்கள் உதவி புரிந்தனர். இந்த இருப்பு சான்றிதழ் பெறுவதன் மூலம், உரியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும், இறந்தவர்கள் பெயரில் முறைகேடாக ஓய்வூதியம் பெறுவதை தடுக்கவும் முடியும் என, ரயில்வே வட்டாரம் தெரிவித்துள்ளது.

The post தென் மாவட்டங்களை சேர்ந்த ரயில்வே ஓய்வூதியர்களுக்கு இருப்பு சான்றிதழ் முகாம் appeared first on Dinakaran.

Tags : Certificate ,Southern Districts ,Madurai ,Zonal Manager ,Sarath Srivatsava ,certificate camp ,southern ,Dinakaran ,
× RELATED டெல்டா, தென் மாவட்டங்களில் 2வது நாளாக...