புதியதாக கட்சி ஆரம்பித்தவர்கள் விரைவில் காணாமல் போய்விடுவார்கள்: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

திருவள்ளூர்: திருவள்ளூரில் மேற்கு மாவட்ட அதிமுக வளர்ச்சி பணிகள் குறித்த கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா தலைமை தாங்கினார். ஒன்றிய, நகர செயலாளர்கள் கே.சுதாகர், ராமஞ்சேரி எஸ்.மாதவன், டி.டி.சீனிவாசன், இ.என்.கண்டிகை ஏ.ரவி, சக்திவேல், டி.சௌந்தர்ராஜன், ஜி.கந்தசாமி, ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்.  அப்போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது: புதியதாக கட்சி ஆரம்பித்தவர்கள் விரைவில் அதாவது மூன்று அல்லது ஆறு மாதங்களுக்குப் பிறகு இவர்கள் காணாமல் போய்விடுவார்கள். அதிமுகதான் என்றுமே தொடர்ந்து நிலைத்து நிற்கும். 2026 தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆவார்.

அதற்கு கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு கடுமையாக பாடுபட வேண்டும் என்றார். முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறும்போது, பொதுமக்கள் ஆதரவுடன் வருகின்ற 2026 தேர்தலில் நிச்சயம் அதிமுக ஆட்சியை கைப்பற்றும். எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தமிழக முதலமைச்சராவார். இதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

இதில் முன்னாள் எம்பிக்கள் பி.வேணுகோபால், திருத்தணி கோ.அரி, விஜயகுமார், மாவட்ட நிர்வாகிகள் இன்பநாதன், வி.ஆர்.ராம்குமார், ஆர்.டி.இ.சந்திரசேகர், வலசை ஆர்.சந்திரசேகர், வேளஞ்சேரி சந்திரன், சிற்றம் சீனிவாசன், எஸ்.ஏ.நேசன், எஸ்.ஞானகுமார், பி.வி.பாலாஜி, எம்.ஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post புதியதாக கட்சி ஆரம்பித்தவர்கள் விரைவில் காணாமல் போய்விடுவார்கள்: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: