கூவம் ஆறு, பக்கிங்காம் கால்வாயினை கடப்பதற்குத் தேவையான பாலங்கள், இரயில்வே கடவு பாலங்கள் தேவைப்படுகின்றன. இவற்றின் சில பணிகள் நெடுஞ்சாலைத்துறை சென்னை பெருநகர அலகினால் எடுத்துக் கொள்ளப்பட்டு செயலாக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் நில எடுப்புப் பணிகளும் அடங்கும் ரூபாய் 50 கோடிகளுக்கு மேல் உள்ள 16 பணிகளின் மொத்த மதிப்பு ரூ.2375 கோடிகளுக்கும் இவற்றில் 11 பணிகள் நில எடுப்பு பணிகளாகும். நில எடுப்பு பணிகள் அனைத்தும் துவங்கப் பெற்று பல்வேறு நிலைகளில் உள்ளது. இவை முழுமையாக முடிக்கப்பட்டால் பல்வேறு திட்டப் பணிகள் செயலாக்கத்திற்கு வந்து சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் என்பதை குறிப்பிட்ட அமைச்சர் வருவாய்த்துறை மற்றும் நில எடுப்பு அலுவலர்கள் உதவியுடன் இப்பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இது தவிர பெருங்களத்தூர் இரயில்வே பாலப் பணியில் உள்ள மீதமுள்ள பணிகள் வனத்துறை, மின்சார வாரியம் அனுமதிகளைப் பெற்று துவங்க வேண்டும். தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலைப் பணிகள் அனைத்தையும் 2025 மார்ச் இறுதிக்குள் முடிக்க வேண்டும். கிழக்குக் கடற்கரை சாலை அகலப்படுத்தும் பணியினையும் 2025 மார்ச் இறுதிக்குள் முடிக்க வேண்டும். மத்திய கைலாஷ் சந்திப்பில் உள்ள பல்வழிச் சாலை மேம்பாலத்தினை 2025 மே இறுதிக்குள் முடிக்க வேண்டும். பாடி அருகே உள்ள இரயில்வே மேம்பாலத்தை 2025 டிசம்பர் இறுதிக்குள் முடிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்டு உள்ள காலக்கெடுவிற்குள் அனைத்து பணியினையும் தரமுடன் செயலாக்கிட வேண்டும் என்று உத்திரவிட்டார்.
The post நெடுஞ்சாலை துறை சார்பில் மேற்கொள்ளக்கூடிய பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.