ஒடுகத்தூரில் ஆடுகள் விற்பனை சூடு பிடித்தது: ரூ11 லட்சத்திற்கு வர்த்தகம்


ஒடுகத்தூர்: ஒடுகத்தூர் வாரச்சந்தையில் ரூ.11 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் வாரந்ேதாறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடப்பது வழக்கம். இந்த சந்தைக்கு உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் ஆடுகளை விற்பனை செய்யவும், வாங்கிச்செல்லவும் வருகின்றனர். இதனால் வாரந்தோறும் ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தின்போது திருவிழாவையொட்டி ஆடுகள் விற்பனை மேலும் உயரும். அதே நேரத்தில் புரட்டாசி மாதத்தில் ஆடுகள் விற்பனை குறையும். இந்த நிலையில் இன்று அதிகாலை வாரச்சந்தை கூடியது. அப்போது கடுமையான மூடுபனி காணப்பட்டது.

அருகே இருப்பவர்கள் கூட தெரியாத வகையில் பனிமூட்டம் காணப்பட்டது. ஆனாலும், இன்று நடந்த சந்தையில் ஆடுகளின் வரத்து சற்று அதிகரித்தே இருந்தது. இன்று நடந்த சந்தையில் செம்மறி ஆடுகளும் அதிகளவு விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். பனியை பொருட்படுத்தாமல் விற்பனை சூடு பிடித்தது. ஆடுகளை வளர்க்க போட்டிபோட்டு வாங்கினர். இதனால் ஆடுகளின் விலையும் கிடுகிடுவென்று உயர்ந்தது. அதன்படி ஒரு ஜோடி ஆட்டின் விலை ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்கப்பட்டது. காலை நிலவரப்படி ரூ.11 லட்சம் வரை ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ஒடுகத்தூரில் ஆடுகள் விற்பனை சூடு பிடித்தது: ரூ11 லட்சத்திற்கு வர்த்தகம் appeared first on Dinakaran.

Related Stories: