இந்தநிலையில் ஆலங்குடி பகுதியில் கைவரிசை காட்டும் திருடனை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில், வாழ்த்துகிறோம்… இன்டர்நெட் கேபிள் திருடா! ஆலங்குடிக்கு டப் கொடுக்கும் எங்கள் ஆருயிர் திருடனே!. சிசிடிவிக்கே தண்ணி காட்டும் எங்கள் திருடர் குல திலகமே!. அண்ணன் ஸ்டைல் Splendor பாண்டியின் 300வது திருட்டு விழா வெற்றி பெறவும், 1000வது திருட்டு விழாவை தாங்கள் கொண்டாடவும் மனமார வாழ்த்துகிறோம் என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. இப்படிக்கு ஆல்பா குரூப்ஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. போஸ்டர்கள் சமூகவலை தளங்களில் வைரலான நிலையில், இது குறித்து ஆலங்குடி போலீசில் பிஎஸ்என்எல் இளநிலை அலுவலர் சங்கர சுப்பிரமணியன் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், கல்லாலங்குடியை சேர்ந்த ஆரோக்கிய சுந்தர் ஜெயசீலன்(36) என்பவர் தான் கேபிள் வயர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது ெசய்து விசாரித்து வருகின்றனர். நகரம் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வலுவேல் திருடன் வேடத்தில் நடித்திருப்பார். அதில் ஒரு காட்சியில் ஒரு வீட்டுக்கு வடிவேல் திருட செல்வார். அப்போது அவரது கூட்டாளிகள், அண்ணனின் 100வது திருட்டு வெற்றி பெற வாழ்த்துவதாக போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டியிருப்பர். போலீஸ் வேனிலேயே இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும். திருடுவதற்காக வீட்டின் கதவை திறந்து உள்ளே செல்லும் போது, அங்கு காத்திருந்த போலீசார் வடிவேலுவை கைது செய்வார்கள். இந்த திருட்டு காட்சியை பார்ப்பவர்கள் வயிறு குலுங்க சிரிப்பார்கள். அதேபோன்ற சம்பவம் தான் புதுகை அருகே அரங்கேறி உள்ளது.
The post ‘300வது திருட்டு வெற்றி பெற வாழ்த்துகிறோம்’ வடிவேல் பட பாணியில் திருடனை வாழ்த்தி போஸ்டர்: புதுகை அருகே சுவாரஸ்யம் appeared first on Dinakaran.