திருச்சியில் பயங்கரம் ஊசி மூலம் காற்றை செலுத்தி வாலிபர் கொடூர கொலை

*தாய், மனைவி உள்பட 5 பேர் கைது

திருச்சி : திருச்சி சஞ்சீவிநகர் வடமல்லி தெருவை சேர்ந்தவர் காமாட்சி (52). இவரது மகன் குணசேகரன்(34). இவரது மனைவி சுலோசனா(31). குணசேகரனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. தினமும் மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்து தாய் மற்றும் மனைவியிடம் தகராறு செய்து வழக்கம் என கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் அதிகாலை குணசேகரன் வழக்கம்போல் போதையில் வீட்டுக்கு வந்து தாய், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.

பின்னர் அறைக்கு சென்று தூங்கி விட்டார். பின்னர் சிறிது நேரத்தில் குணசேகரன் மயங்கி கிடப்பதாக கூறி அவரை, மாமியார், மருமகள் சேர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், குணசேகரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.தகவலறிந்த கோட்டை போலீசார், குணசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில், காலி சிரெஞ்சில் வெறும் காற்றை ஏற்றி உடலில் செலுத்தியும், கழுத்தை நெரித்தும் குணசேகரன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், காமாட்சி, சுலோசனாவை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், போதையில் மகனின் டார்ச்சர் நாளுக்கு நாள் அதிகமாக இருந்ததால், மகனை கொலை செய்தது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘குணசேகரனின் தாய் காமாட்சிக்கு, பூசாரி தெருவை சேர்ந்த விஜயகுமாருடன் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. காமாட்சியின் உறவினர்களான திருநங்கைகள் விக்கி (எ) லித்தயானி , குபேந்திரன்(எ) நிபுயா. இவர்கள் 3 பேரிடமும் தனது மகன் தினமும் குடித்துவிட்டு வந்து போதையில் தன்னையும், மருமகளையும் தாக்கி துன்புறுத்துவதாக புலம்பி வந்துள்ளார். இதனால் குணசேகரனை கொல்ல திட்டமிட்டனர். சம்பவத்தன்று போதையில் வந்து தகராறு செய்து விட்டு அறையில் குணசேகரன் தூங்குவதை காமாட்சி, 3 பேருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து, விஜயகுமார், விக்கி, குபேந்திரன் ஆகிய 3 பேரும் காமாட்சி வீட்டுக்கு வந்தனர். இதில் குபேந்திரன் கையில் எடுத்து வந்திருந்த உடலில் மருந்து செலுத்த பயன்படுத்தும் ஊசியில் (சிரிஞ்ச்) வெறும் காற்றை ஏற்றி அறைக்குள் படுத்திருந்த குணசேகரனின் உடலில் செலுத்தினார். பின்னர் 3 பேரும் சேர்ந்து, சுடிதார் துப்பட்டாவால் குணசேகரனின் கழுத்தை ெநரித்து கொன்றுள்ளனர். வீட்டுக்க யாரும் வருகிறார்களா என பார்க்க தாயும், மனைவியும் வாசலில் நின்று நோட்டமிட்டுள்ளனர்.

பின்னர் குணசேகரனை கொன்றதை உறுதி செய்த பின்னர் விஜயகுமார் உள்ளிட்ட 3 பேரும் ஒன்றும் நடக்காதது போல் சென்று விட்டனர். மகனை கொன்றது வெளியில் தெரியாமல் இருக்க தாய் காமாட்சி, வீட்டில் குணசேகரன் மயங்கி கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் முன்பு நாடகமாடி விட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் என்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தாய், மனைவி உள்பட 5பேரையும் கைது செய்தனர்.

The post திருச்சியில் பயங்கரம் ஊசி மூலம் காற்றை செலுத்தி வாலிபர் கொடூர கொலை appeared first on Dinakaran.

Related Stories: