தேனி, நவ. 22: ஓசூரில் வக்கீல்.கண்ணனை நீதிமன்ற வளாகத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டத்தை கண்டித்து தேனி மாவட்ட நீதிமன்றம் முன்பாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேனி வக்கீல்கள் சங்கத்தின் சார்பில், தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் சங்கத் தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, ஓசூரில் வக்கீல்.கண்ணன் நீதிமன்ற வளாகத்தின் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், வக்கீல் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வலியுறுத்தியும், வக்கீல்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி நேற்றும், இன்றும் நீதிமன்ற பணிகளில் இருந்து விலகியிருப்பதாக அறிவித்து, நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர்.
The post தேனி மாவட்ட நீதிமன்றம் முன்பாக வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.