அம்மன் கழுத்தில் கிடந்த 4 சவரன் தாலி திருட்டு

புழல்: புழல் அடுத்த புத்தகரம் – சூரப்பட்டு சர்வீஸ் சாலை, விக்னேஸ்வரா நகரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. நேற்று காலை கோயிலை திறக்க வந்த போது, கிரில் கேட் உடைக்கப்பட்டு, அம்மன் சிலை கழுத்தில் கிடந்த 4 சவரன் தாலி திருடு போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், புழல் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.

அதில், மதுரவாயல் ஏரிக்கரை கந்தன் தெருவை சேர்ந்த கலை (எ) கலைச்செல்வன் (35), மடிப்பாக்கம் லட்சுமி நகரை சேர்ந்த முருகன் (38) ஆகியோர், கோயில் பூட்டை உடைத்து, அம்மன் கழுத்தில் கிடந்த 4 சரவன் தாலி செயினை திருடியது தெரியவந்தது. அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 4 சவரன் தாலியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post அம்மன் கழுத்தில் கிடந்த 4 சவரன் தாலி திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: