காவல்கிணறு விலக்கில் கிறிஸ்தவ ஆலயத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு

பணகுடி, நவ.22: காவல்கிணறு விலக்கில் கிறிஸ்தவ தேவாலயத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டதால் நெடுஞ்சாலைத் துறையினர் வேறுவழியின்றி திரும்பி சென்றனர். பணகுடி அருகே காவல்கிணறு விலக்கு பகுதியில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. 35 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இந்த ஆலயத்தை நேற்று நெடுஞ்சாலை துறையினர் திடீரென அளவீடு செய்ய வந்தனர். அப்போது சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து நெடுஞ்சாலைத்துறையினரை முற்றுகையிட்டனர். அப்போது கிறிஸ்தவ வழிபாடு தலத்தை அகற்றக்கூடாது என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலை துறையினர் வேறுவழியின்றி திரும்பி சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கிறிஸ்தவ ஆலயத்தால் யாருக்கும் இடையூறு கிடையாது. இதனை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றக்கூடாது’ என்றனர்.

The post காவல்கிணறு விலக்கில் கிறிஸ்தவ ஆலயத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: