×

யானை தாக்கி இறந்தவர்களுக்கு உரிய இழப்பீடு: பிரேமலதா வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 18ம்தேதி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வளர்க்கப்படும் தெய்வானை என்ற யானை தாக்கி திருச்செந்தூர் வஉசி நகரைச் சேர்ந்த சதாசிவம் மகன் உதயகுமார் (45) என்ற உதவி பாகனும், அவரை காண வந்த உறவினர் கன்னியாகுமரி (மேற்கு) மாவட்டம், பலுகல் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் நாயர் மகன் சிசுபாலன் (58) என்பவரும் உயிரிழந்துள்ளனர். உதயகுமார் மற்றும் சிசுபாலன் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு பெரும் தொகையை நிவாரணமாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post யானை தாக்கி இறந்தவர்களுக்கு உரிய இழப்பீடு: பிரேமலதா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Premalatha ,CHENNAI ,DMUDI ,General Secretary ,Deivanai ,Tiruchendur Subramaniaswamy ,Satasivam ,Udayakumar ,Vausi Nagar, Tiruchendur ,
× RELATED உலக மகளிர் தினத்தில் அனைத்து நலமும்,...