இதையடுத்து, அந்நாட்டின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆப் எக்ஸலன்ஸ்’யை மோடிக்கு இர்பான் அலி வழங்கினார். இந்த விருதை பெறும் 4வது வெளிநாட்டினர் மோடி ஆவார். கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்பட்டது, உலக நாடுகளின் ஒற்றுமைக்காக பங்காற்றியது மற்றும் இந்தியா- கயானா நாடுகளின் உறவுகளுக்கு பாலமாக இருத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு வெளிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், டொமினிகா நாட்டின் உயரிய விருதும் மோடிக்கு நேற்று வழங்கப்பட்டது. ‘டொமினிகா கவுரவ விருதை’ அந்நாட்டின் பிரதமர் சில்வானி பர்டன் வழங்கினார். கொரோனா காலத்தில் சிறந்த பங்களிப்பு, இரு நாட்டு உறவுகள் மேம்பாடு ஆகியவற்றுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 2 நாடுகளின் உயரிய விருதுகளை பெற்ற பிரதமர் மோடி, இது 140 கோடி இந்திய மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
The post கொரோனா பேரிடரில் சிறந்த பங்களிப்பு; மோடிக்கு கயானா, டொமினிகா நாடுகளின் உயரிய விருது appeared first on Dinakaran.