சென்னை: தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது.தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாடு – இலங்கை கடற்கரைகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது appeared first on Dinakaran.