ஆண்டிபட்டி, நவ.21: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே குள்ளப்புரம் பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி(53). இவர் நேற்று முன்தினம் க.விலக்கு பகுதியில் இருந்து பெரியகுளம் பகுதியை நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கோவில்பட்டி விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது குறுக்கே நாய் வந்ததால் நாய் மீது டூவீலர் மோதி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நேற்று அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து க.விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post பெரியகுளம் அருகே டூவீலர் விபத்தில் ஒருவர் பலி போலீசார் விசாரணை appeared first on Dinakaran.