கோயில் குடமுழுக்கு விழா

ராமநாதபுரம், நவ.21: ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை பஞ்சாயத்திலுள்ள உடைச்சியார்வலசை சக்திமாரியம்மன் மற்றும் பரிவார கிராம தேவதைகளுக்கு குடமுழுக்கு நேற்று நடந்தது. நான்கு கால பூஜைகள் வரை நடத்தப்பட்டு யாக சாலையில் இருந்து புனிதநீர் குடம் புறப்பட்டு நேற்று காலையில் மஹா பூர்ணாஹீதி நடத்தப்பட்டு கோயில் கலசங்களில் கும்ப புனிதநீர் ஊற்றப்பட்டது. பிறகு சாமி விக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. மாலையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

The post கோயில் குடமுழுக்கு விழா appeared first on Dinakaran.

Related Stories: