- ஐஓபி
- கனக்கலியாநல்லூர்
- திருச்சி
- பெரம்பலூர்
- அருண் நேரு
- லால்குடி கனக்கலியாநல்லூர்
- திருச்சி மாவட்டம்
- இந்திய வெளிநாட்டு வங்கி
- திருச்சி லால்குடி
- தின மலர்
திருச்சி, நவ.21: திருச்சி மாவட்டம் லால்குடி காணக்கிளியநல்லுரில் ஐஓபியின் 66வது புதிய கிளையை பெரம்பலூர் எம்பி அருண் நேரு நேற்று திறந்து வைத்தார். திருச்சி லால்குடி அடுத்த காணக்கிளியநல்லூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 66வது புதிய கிளை திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் பெரம்பலுார் எம்பி அருண்நேரு கலந்து கொண்டு வங்கிக்கிளையை துவக்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் முன்னிலை வகித்தார். விழாவின் போது, எம்பி அருண் நேரு பயனாளிகளுக்கு பால் மாட்டுக்கடன், நெசவாளா்களுக்கான முத்ரா கடன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான கடன்களை வழங்கினார். விழாவில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்கா தாரிணி, ஐஓபியின் இயக்குநா் தனராஜ், ஐஓபி திருச்சி மண்டல முதன்மை மண்டல மேலாளா் ராம், கிளை மேலாளா் முகேஷ் கார்த்திக், மண்டல அலுவலக அலுவலா்கள் மற்றும் வங்கிக்கிளை ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
The post காணக்கிளியநல்லூரில் ஐஓபி புதிய கிளை appeared first on Dinakaran.