மானூர் அருகே விவசாயியை கட்டையால் தாக்கிய வாலிபர் கைது

மானூர்,நவ.21: மானூர் அருகே விவசாயியை கட்டையால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மானூர் அருகேயுள்ள சுப்பையாபுரத்தைச் சேர்ந்த சேர்மப்பாண்டியனின் மகன் சந்திரசேகர் (38). விவசாயி. இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினருக்கும் இட பிரச்னை தொடர்பாக விரோதம் இருந்துவருகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று அழகியபாண்டியுரத்தில் உள்ள ஓட்டல் முன்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுப்பையாபுரத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரத்தின் மகன் சரவணன் (28) என்பவர் தட்டிக்கேட்டார். அப்போது சந்திரசேகர் அவரை காலால் மிதித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சரவணன் அங்கிருந்த கட்டையால் சந்திரசேகரை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சந்திரசேகர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

The post மானூர் அருகே விவசாயியை கட்டையால் தாக்கிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: