×
Saravana Stores

ஐக்கிய அரபு எமிரேட்சில் முதல்முறையாக ரூபே வகை ஏடிஎம் கார்டு திட்டத்தை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை (23.8.190 அன்று வருகை தர உள்ளார். இதுகுறித்து அமீரக இந்திய தூதர் நவ்தீப் சிங் சூரி கூறியதாவது. ஐக்கிய அரபு அரபு எமிரேட்ஸ்க்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை வருகை தர உள்ளார் இந்த சுற்றுப்பயணத்தில் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட அமீரகத்தின் உயரிய விருது இந்திய பிரதமருக்கு நேரில் வழங்கப்படுகிறது. மேலும் இந்தியாவின் ரூபே என்றழைக்கப்படும் கார்டு அமீரகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த வகைக் கார்டுகள் விசா, மாஸ்டர் காடுகள் போன்று பயன்படுத்தலாம். கடைகள், ஹோட்டல்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற பகுதிகளில் பொருட்களை வாங்க இந்த கார்டுகளை பயன்படுத்தலாம். இதற்கான சேவை கட்டணம் இல்லை. இந்தியா, சிங்கப்பூர், பூட்டான், மாலத்தீவு ஆகிய நாடுகளில் இந்த கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முதல்முறையாக ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்த கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்தின்போது இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் இந்தியாவிலிருந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் ரூபே கார்ட் பயன்படுத்தி சேவை கட்டணம் இல்லாமல் பொருட்களை வாங்க முடியும். மேலும் கரன்சி மாற்றும் செலவையும் சேமிக்க முடியும். ஆனாலும் இவ்வகை கார்டுகளை அமீரகத்தில் உள்ள ஏடிஎம் மெஷின்களில் பயன்படுத்திக்கொள்ள முடியுமா என்று அறிமுகப்படுத்தும் போது தான் தெரியவரும். மேலும் மகாத்மா காந்தியின் நூற்றி ஐம்பதாவது நினைவு தினத்தை கொண்டாடும் வகையில் அவரது உருவம் பொறித்த தபால் தலைகள் வெளியிடும் நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கனடிய தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம் நடத்திய சிறப்பு பொங்கல் விழா