×
Saravana Stores

மணிப்பூர் மாநில தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்

சென்னை: மணிப்பூர் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஒன்றிய நீதி மற்றும் சட்டத்துறை பரிசீலித்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது.

இதை பரிசீலித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க ஒப்புதல் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் வெள்ளிக்கிழமை மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் இன்று வழியனுப்பு விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், பார்கவுன்சில், வழக்கறிஞர்கள் சங்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு பாராட்டி பேசுகின்றனர். நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மணிப்பூர் உயர் நீதிமன்றத்திற்கு செல்வதால் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக குறைந்துள்ளது. இன்னும் 9 இடங்கள் காலியாக உள்ளன.

The post மணிப்பூர் மாநில தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : T. Krishnakumar ,Chief Justice ,Manipur ,President ,Drabupati Murmu ,CHENNAI ,Drarubathi Murmu ,Supreme Court Collegium ,D. Krishnakumar ,Madras High Court ,Manipur State High Court ,Chief Justice of ,Drabupathi Murmu ,Dinakaran ,
× RELATED மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை...