×
Saravana Stores

போரால் பாதிக்கப்பட்ட காசாவிற்கு 98 லாரியில் சென்ற நிவாரண பொருட்கள் கொள்ளை

காசா: இஸ்ரேலுக்கும், ஹமாசுக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரினால், காசாவில் கடுமையான உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் உணவு பொருட்களின் விலையும் படமடங்கு உயர்ந்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் கூறுகையில், ‘இந்த வார இறுதியில் 98 லாரிகள் மூலம் காசாவிற்கு உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. அந்த வாகனத்தை பின்தொடர்ந்து 109 கான்வாய் வாகனங்கள் சென்றன. ஆனால் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் ஆயுதமேந்திய கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டது.

நிவாரண பொருட்களில் உணவு, மருந்து மற்றும் பிற உதவி பொருட்கள் இருந்தன. இவை மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியவில்லை. பாலஸ்தீன பகுதிக்குள் கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு உணவு பொருட்களை சப்ளை செய்ய முடியவில்லை. இஸ்ரேலின் கெடுபிடிகளால் காசாவிற்குள் உணவு பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் காசாவில் உணவுப் பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது’ என்றார்.

The post போரால் பாதிக்கப்பட்ட காசாவிற்கு 98 லாரியில் சென்ற நிவாரண பொருட்கள் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Gaza ,Israel ,Hamas ,World Health Organization ,Margaret Harris ,Dinakaran ,
× RELATED காசா, லெபனான், ஈரானை தொடர்ந்து சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்