மும்பை: பாஜக நிர்வாகியிடம் ரூ.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், சுப்ரியா சுலே ‘கிரிப்டோகரன்சி’ ஊழலில் ஈடுபட்டதாக புதிய வீடியோ ஒன்று வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடந்து வருகிறது. இத்தேர்தலுக்கு முந்தைய தினமான நேற்று மாலை பாஜக தேசியச் செயலாளர் வினோத் தாவ்டே, மும்பை அருகே வாக்காளர்களுக்கு ரூ.5 கோடி கொடுக்க ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அப்போது ஓட்டலில் இருந்து ரூ.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வினோத் தாவ்டே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்புகார் வெளியில் வந்தவுடன் பாஜக புதிய ஊழல் புகாரைத் தெரிவித்துள்ளது.
அதாவது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மகள் சுப்ரியா சுலே மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டேல் ஆகியோர் ‘கிரிப்டோகரன்சி’ ஊழலில் ஈடுபட்டு இருப்பதாகக் கூறி வீடியோ ஒன்றை அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுதன்சு வெளியிட்டுள்ளார். மேலும் அதில் எதிர்க்கட்சிகளின் முகமூடி கழற்றப்பட்டு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து சுப்ரியா சுலே கூறுகையில், ‘பாஜக மலிவான அரசியல் செய்கிறது. இவ்விசயம் தொடர்பாக எந்த நேரத்திலும் எந்த மேடையிலும் விவாதம் செய்யத் தயாராக உள்ளேன். யூகங்கள் அடிப்படையில் தேர்தல் நேரத்தில் பாஜக ெபாய்யை பரப்பி வருகிறது. அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்வேன்’ என்று கூறினார்.
The post பாஜக நிர்வாகியிடம் ரூ.9 லட்சம் பறிமுதல்; சுப்ரியா சுலே ‘கிரிப்டோகரன்சி’ ஊழலில் ஈடுபட்டாரா?.. புதிய வீடியோ வெளியானதால் பரபரப்பு appeared first on Dinakaran.