ஜெய்ப்பூரில் இருந்து ஆன்லைனில் பட்டங்கள், மாஞ்சா நூல் வாங்கும் நபர்கள்: சென்னை காவல்துறையினர் தொடர் சோதனை

சென்னை: சென்னையில் குழந்தை உட்பட 2 பேரின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்ததை அடுத்து காவல்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மாஞ்சா நூல் விற்பனை குறித்து புதிய தகவல்களும் வெளியாகி வருகின்றன. அண்மை காலங்களில் குறைந்து இருந்த மாஞ்சா பட்டம் கலாச்சாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. கடந்த 17ம் தேதி மாஞ்சா பட்டத்தின் நூல் அறுத்ததில் இரண்டரை வயது குழந்தை உட்பட இருவரின் கழுத்து அறுப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்படட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழ்நாட்டில் பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூல் தடை செய்யப்பட்டு இருப்பதால் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆஃப் குழு மூலமாக ஜெய்பூரில் இருந்து பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூல் வாங்கி வந்து சென்னையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. மேலும், குருகோகுல் கே.கே.நகரில் உள்ள தனது வீட்டிலேயே மாஞ்சா நூல் விற்பனை செய்து வருவதும் இவர் பட்டம் தொடர்பான போட்டியை நடத்தி வருவதும் விசாரணையில் தெரிய வந்தது.

குறிப்பாக வாட்ஸ் ஆஃப் குழுவில் பட்டங்கள், மாஞ்சா நூல் கேட்டால் அவர்களுக்கு சப்ளை செய்யக்கூடிய பணி ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. கைது செய்யப்பட்டவர்களின் குடோன் மற்றும் வீடுகளில் தனிப்படை காவல்துறையினர் சோதனை மேற்கொண்ட போது 500க்கும் மேற்பட்ட காற்றாடிகள், மாஞ்சா நூல் தயாரிக்க பயன்படுத்தப்படும் மெஷின்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இன்ஸ்டாகிராம் மூலமாக விற்பனை செய்யும் FB கைட்ஸ் என்ற நபரை கைது செய்யும் பணிகளில் காவல்துறையினர் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். மாஞ்சா நூல் மற்றும் பட்டம் விடுபவர்களை தொடர்ச்சியாக கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாவும், தடை செய்யப்பட்டுள்ள பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூல் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

The post ஜெய்ப்பூரில் இருந்து ஆன்லைனில் பட்டங்கள், மாஞ்சா நூல் வாங்கும் நபர்கள்: சென்னை காவல்துறையினர் தொடர் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: