×
Saravana Stores

பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி; இறுதி போட்டியில் வெல்வது யார்? இந்தியா- சீனா இன்று மோதல்

ராஜ்கிர்: 8வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியா (5 வெற்றி) முதலிடமும், சீனா (4 வெற்றி, ஒரு தோல்வி) 2வது இடமும், மலேசியா (2 வெற்றி, 3 தோல்வி) 3வது இடமும், ஜப்பான் (ஒரு வெற்றி, 2 டிரா, 2 தோல்வி) 4வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தது. இதில் சீனா 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 3வது முறையாக இறுதி சுற்றை எட்டியது.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தோற்கடித்து 5வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைகிறது. தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை 4.45 மணிக்கு நடக்கிறது. இதில் உலக தரவரிசையில் 9வது இடம் வகிக்கும் இந்திய அணி, 6ம் நிலை அணியான சீனாவுடன் மோத உள்ளது. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான இந்தியா ஏற்கனவே லீக்கில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். ஆட்டம் அனல்பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி; இறுதி போட்டியில் வெல்வது யார்? இந்தியா- சீனா இன்று மோதல் appeared first on Dinakaran.

Tags : Women's Asian Champions Cup Hockey ,India ,China ,Rajgir ,8th Women's Asian Champions Cup hockey tournament ,Rajgir, Bihar ,Dinakaran ,
× RELATED இந்தியா, சீனா அமைச்சர்கள் லாவோஸில் பேச்சுவார்த்தை