100 ஏக்கரில் கடல் உப்பு நீர் புகுந்ததால் 20 நாட்களே ஆன இளம் நெற்பயிர்கள் அடியோடு அழுக துவங்கியுள்ளன. இதனால் சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். விளை நிலங்களில் கடல்நீர் புகுவதை தடுக்க கடற்கரை ஓரங்களில் கருங்கற்களை கொட்டி தடுப்புகளை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post நாகை அருகே விளைநிலங்களுக்குள் புகுந்த கடல் நீரால் நெற்பயிர்கள் சேதம்: சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.