×
Saravana Stores

நவ.25, 26ம் தேதிகளில் தமிழ்நாட்டிற்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை : நெல்லை மாவட்டம் நாலுமுக்கில் 17 செ.மீ. மழைப் பதிவு!!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் நாலுமுக்கில் 17 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது. நெல்லை மாவட்டம் ஊத்து, நாகை மாவட்டம் கோடியக்கரையில் தலா 15 செ.மீ. மழைப் பெய்துள்ளது. நெல்லை மாவட்டம் காக்காச்சி 14 செ.மீ., நாகை மாவட்டம் திருப்பூண்டியில் 13 செ.மீ. மழைப் பெய்துள்ளது. நாகை மாவட்டம் திருக்குவளையில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வேதாரண்யம், மாஞ்சோலை, ராமநாதபுரத்தில் தலா 10 செ.மீ., தலைஞாயிறில் 9 செ.மீ. மழைப் பதிவு ஆகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5 இடங்களில் மிக கனமழை, 8 இடங்களில் கனமழைப் பதிவு ஆகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தமிழ்நாட்டில் வரும் நவ.25, 26ம் தேதிகளில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. மேலும் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நாளை வளிமண்டல மேலடுக்கு காற்று சுழற்சி உருவாகி, 23-ம் தேதி தாழ்வுப் பகுதியாக மாறும் என்றும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடலில் மீன்பிடிக்க சென்றிருக்கும் அனைத்து படகுகளும் 23-ம் தேதிக்குள் கரைக்கு திரும்பிட வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

The post நவ.25, 26ம் தேதிகளில் தமிழ்நாட்டிற்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை : நெல்லை மாவட்டம் நாலுமுக்கில் 17 செ.மீ. மழைப் பதிவு!! appeared first on Dinakaran.

Tags : Nadu ,Nella District Nalumukh ,Chennai ,Tamil Nadu ,Nella district ,Nella District Oothu ,Nagai District Kodiakara ,Paddy District Kakachi ,
× RELATED மாநிலத்தின் மின்தேவை...