×
Saravana Stores

ஆபத்தை உணராமல் படியில் தொங்கியபடி பயணிக்கும் பள்ளி மாணவர்கள் போக்குவரத்து காவல்துறை கண்டுகொள்ளுமா?

 

திருப்பூர், நவ.20: திருப்பூர் மாநகரில் பல லட்சம் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். பெரும்பாலானோர் அரசு பேருந்துகளில் பயணித்து பள்ளிகளுக்கு செல்வது வழக்கம்.‌ இதன் காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பள்ளி மாணவ மாணவிகளின் கூட்டம் பெருமளவு இருக்கும். இதன் காரணமாகவே போக்குவரத்து கழகம் சார்பில் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்களின் வசதிக்கேற்றவாறு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் மாணவர்கள் ஆபத்தை உணராமல் படியில் தொங்கியபடி பயணம் மேற்கொள்வது தொடர் கதையாகி வருகிறது.  திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து காங்கயம் செல்லும் அரசு பேருந்தில் நேற்று காலை அரசு பள்ளி மாணவர்கள் சிலர் சீருடையுடன், புத்தகப்பையை சுமந்தவாறு படியில் தொங்கியவாறு பயணம் செய்தனர்.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பேருந்துக்குள் இட வசதி இருந்தும், மாற்று பேருந்துகள் இருந்தும் கூட மாணவர்கள் மத்தியில் இதே பெருமையாக பார்க்கப்படுவதால் ஆபத்தை உணராமல் மாணவர்கள் இதே போன்று படியில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டு வருவதாக பேருந்து நடத்துனர்கள் கூறுகின்றனர். இதனை போக்குவரத்து காவல்துறையினர் கண்காணித்து மாணவர்களுக்கு அறிவுரை அளிப்பதோடு, பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

The post ஆபத்தை உணராமல் படியில் தொங்கியபடி பயணிக்கும் பள்ளி மாணவர்கள் போக்குவரத்து காவல்துறை கண்டுகொள்ளுமா? appeared first on Dinakaran.

Tags : Tirupur ,
× RELATED திருப்பூர் தெற்கு வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆய்வு