திருவிடைமருதூர், நவ.20: திருவிடைமருதூர் அருகே திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவார 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவிடைமருதூர் அருகே உள்ள திருபுவனத்தில் அறம் வளர்த்த நாயகி உடனாய கம்பகரேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தனி கோயில் கொண்டு சரபேஸ்வரர் அருள்பாலிக்கிறார். தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான இவ்வாலயத்தில் கார்த்திகை முதல் சோமவார வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி 1008 சங்குகளில் புனித நீர் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்று, மகா தீபாராதனையுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது. கம்பகரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றதை தொடர்ந்து கடம் நீர் அபிஷேகம், 1008 சங்காபிஷேகம் என நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. சோமவார வழிபாடு ஏற்பாடுகளை ஆலய காசாளர் கந்தசாமி மற்றும் ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.
The post திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவார 1008 சங்காபிஷேகம் appeared first on Dinakaran.