தூத்துக்குடி, நவ. 19: தூத்துக்குடியில் ஸ்டவ் வெடித்து தீக்காயமடைந்த பெண் உயிரிழந்தார். தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி ஜெய (56). இவர், கடந்த செப்டம்பர் 23ம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென ஸ்டவ் வெடித்து சேலையில் தீப்பற்றியுள்ளது. இதில் தீக்காயமடைந்த ஜெய, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த அவர், நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தூத்துக்குடியில் ஸ்டவ் வெடித்து காயமடைந்த பெண் சாவு appeared first on Dinakaran.