ஐயப்ப பக்தர்களுக்கு உதவ கேரள அரசு ‘சுவாமி சாட்பாட்’ செயலி உருவாக்கம்

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த ஆண்டில், ஐயப்ப பக்தர்கள் தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்வதில் இடர்பாடுகள் ஏதேனும் ஏற்பாடுமானால், தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில் ‘சுவாமி சாட்பாட்’ ‘Swami Chatbot’ என்னும் வாட்ஸ்அப் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் 24 மணி நேரமும் உதவிகள் பெற முடியும் என்று தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்து கேரள மாநில பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சி தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.

இதன்படி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் சபரிமலையில் கூடுவதால், எதிர்பாராத வகையில் விபத்துகள் ஏதேனும் ஏற்படுமானால் அல்லது அவசர உதவிகள் எதுவும் தேவைப்பட்டால் அத்தகைய தருணங்களில் ‘சுவாமி சாட்பாட்’ என்னும் பயண வழிகாட்டியை கைப்பேசி எண் 6238008000 மூலம் Hi என குறுஞ்செய்தி அனுப்பினால், உதவிகள் உடனே கிடைக்கும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஐயப்ப பக்தர்களுக்கு உதவ கேரள அரசு ‘சுவாமி சாட்பாட்’ செயலி உருவாக்கம் appeared first on Dinakaran.

Related Stories: