புதுக்கடை, நவ.20: புதுக்கடை அருகே மாடச்சேரி பகுதியை சேர்ந்தவர் விஜயன்(68). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சரோஜா (62). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். சம்பவத்தன்று மாலை விஜயன் புதுக்கடைக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டில் வந்து பார்த்த போது, சரோஜாவை காணவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்தும் அவர் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. சரோஜா கழுத்தில் சுமார் 8 பவுன் நகைகள் அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.. இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் ஜானகி விசாரித்து வருகிறார்.
The post கூலித்தொழிலாளி மனைவி மாயம் appeared first on Dinakaran.