சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: குழந்தைகள், பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறை, பாகுபாடு மற்றும் பாலின ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பிரசார இயக்கத்தை நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய சென்னை மாவட்ட குழு சார்பில் ‘இரவும் எமக்கானதே’ என்கிற முழக்கத்தை முன்னிறுத்தி நவம்பர் 16ம்தேதி இரவு 10 மணிக்கு பெரியார் சிலையிலிருந்து உழைப்பாளர் சிலை வரை ‘பாலின சமத்துவ நடை’ நிகழ்வு 2வது ஆண்டாக நடத்த திட்டமிடப்பட்டது.
ஆனால், இதற்கான அனுமதியை காவல்துறை நிகழ்வு நடைபெறும் நாளன்று மறுத்துவிட்டது. அனுமதி மறுத்தது. எனவே, காவல்துறை இந்த நிகழ்வுகளுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும். இந் நிகழ்விற்காக பதியப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post பாலின ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பிரசார இயக்கம்: உரிய அனுமதி வழங்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல் appeared first on Dinakaran.