முதல் நாள் 203 வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு அதற்கான பயோமெட்ரிக் கணக்கெடுக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர். 2வது நாளாக கணக்கெடுப்பு பணி வேளச்சேரி ஜெகநாதபுரம் பகுதியில் நடந்தது. இந்த பணிக்கு குடியிருப்புகளில் வசிக்கும் சுமார் 200க்கும் மேற்பட்டோர் சாலையில் ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மவுலானா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது இடம் குறித்து அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தவறான தகவல் தெரிவித்துள்ளனர். அப்படி நிலத்தை எடுக்க வேண்டுமென்றால் மொத்தம் உள்ள 265 ஏக்கர் நிலத்தையும் மீட்க வேண்டும் என்றார். இந்த இடத்தை பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும் 2வது நாளாக கணக்கெடுப்பை நிறுத்தி விட்டு அதிகாரிகள் சென்றனர்.
The post வேளச்சேரி ஏரியை சுற்றியுள்ள வீடுகளை அகற்ற பயோமெட்ரிக் கணக்கெடுப்புக்கு மக்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.