ஆனால் இந்திய விமான நிலைய ஆணையம் அதற்கான அனுமதியை வழங்காமல் தாமதப்படுத்தியதால் பினாங்கிற்கு இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், தமிழ் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் இந்திய விமான நிலைய ஆணையம் பினாங்கிற்கு நேரடி விமான சேவைகள் இந்தியாவில் இருந்து தொடங்க அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து சென்னையில் இருந்து, வருகிற டிசம்பர் 21ம் தேதியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், பினாங்கிற்கு நேரடி தினசரி விமானத்தை இயக்குகிறது.
டிசம்பர் 21 சனிக்கிழமை முதல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 2.15 மணிக்கு புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், காலையில் பினாங்கு தீவு சென்றடைகிறது. அதன் பின்பு பினாங்கிலிருந்து காலையில் புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் காலை 10.35 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைகிறது. இந்த விமானம் சுமார் 180 பேருக்கு மேல் பயணிக்க கூடிய ஏர் பஸ் 320 ரகத்தை சேர்ந்தது. சென்னை-பினாங்கு இடையே பயண நேரம் சுமார் 4 மணி 30 நிமிடங்கள் ஆகும். தமிழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பினாங்கிற்கு நேரடி தினசரி விமான சேவை சென்னை விமான நிலையத்தில் இருந்து தொடங்குவது தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post தமிழ் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று சென்னை – பினாங்கிற்கு தினமும் விமான சேவை: டிசம்பர் 21ம் தேதி முதல் தொடக்கம் appeared first on Dinakaran.