* நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
* காளையார்கோவிலில் 49.8 மி.மீ. பதிவு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக காளையார்கோவிலில் 49.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மழை தொடங்கியது. சிவகங்கை, காளையார்கோவில், காரைக்குடி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு தொடங்கிய மழை இன்று பகல் முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்தது. மழை பெய்யும் பகுதிகளில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் விடுமுறை அறிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் நேற்று அறிவித்தது. ஆனால், இன்று எந்த அறிவிப்பும் இல்லாததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.
இதனால் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர். கனமழையால் குளங்கள், கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக பகலில் பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் விவசாய பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் அதிகபட்சமாக காளையார்கோவிலில் 49.8 மி.மீ., சிவகங்கையில் 22.2 மி.மீ., காரைக்குடியில் 21 மி.மீ., தேவகோட்டையில் 15.8 மி.மீ., திருப்புவனத்தில் 11.2 மி.மீ., திருப்புத்தூரில் 10.4 மி.மீ., இளையான்குடியில் 7 மி.மீ., சிங்கம்புணரியில் 5.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
The post அதிகாலை முதல் பொழிகிறது: சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக மழை appeared first on Dinakaran.